வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி
Sports

வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி

July 11, 2026 | 1 min read


வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டியின் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்ற நமது தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி கரப்பந்தாட்ட அணி, போகம்பர உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்று கௌரவிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, இன்று காலை கல்லூரியில் நடைபெற்ற விசேட கூட்டத்தில், அணித்தலைவர் முஹம்மத் முஸக்கிர் தலைமையிலான வெற்றி அணியினர், தாங்கள் வென்ற Champion Cup-ஐ கல்லூரி முதல்வர் A.R.M. அஸ்லம் அவர்களிடம் பெருமையுடன் கையளித்தனர். இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி சமூகத்தினரிடையே பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது.


இந்த சிறப்பான வெற்றியை கடுமையான பயிற்சி, அர்ப்பணிப்பு மற்றும் குழு ஒற்றுமையின் மூலம் சாத்தியமாக்கிய அனைத்து மாணவ வீரர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், மாணவர்களை திறமையாக வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியை திருமதி ஸாலிமா அவர்களுக்கும், பயிற்றுவிப்பாளர் சகோதரர் அன்பாஸ் அவர்களுக்கும் எங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறோம்.


நமது கல்லூரிக்கு பெருமை சேர்த்த இந்த இளம் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டப் போட்டிகளிலும் சிறந்து விளங்கி மேலும் பல வெற்றிகளைப் பெற அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம். அவர்கள் தொடர்ந்தும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் முன்னேற வாழ்த்துகிறோம்.