Untold Stories – அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி
Events

Untold Stories – அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி

July 11, 2026 | 1 min read

2026 மே 26 அன்று HESAD ஏற்பாட்டில் தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற "Untold Stories" அனுபவப் பகிர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு பெற்றது.


இந்நிகழ்வில் உற்சாகத்துடன் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் ஆர்வமிக்க பங்கேற்பும் ஒத்துழைப்பும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


மேலும், மாணவர்களுக்கு பயனுள்ள அனுபவங்களையும் ஊக்கமளிக்கும் வழிகாட்டல்களையும் பகிர்ந்து கொண்ட சகோதரர் Imran Nasir அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றிகள். அவருடைய உரையும் அனுபவப் பகிர்வும் மாணவர்களுக்கு புதிய சிந்தனைகளையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியது.


அதேபோல், இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய கல்லூரி அதிபர், பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் இந்நிகழ்வின் வெற்றிக்காக பங்களித்த அனைவருக்கும் எங்களது அன்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


உங்கள் ஒத்துழைப்பும் உற்சாகமான பங்கேற்பும் இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ய பெரிதும் துணைபுரிந்தது. எதிர்காலத்திலும் மாணவர்களின் அறிவு, திறன் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்காக இதுபோன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்ய நாங்கள் எதிர்பார்க்கிறோம்.